Saturday, March 22, 2008

வகுப்பு எடுத்த ஆசிரியர்கள்..!


1.நந்த குமார்(NETWORK,ADBMS)
2.பிரின்ஸ் தேவராஜ்(ETHICS)
3.ரேவதி(COMPUTER ARCHITECTURE)
4.நளினி(DIGITAL,OOPS)

6.பொன்னு சாமி(C#,ARTIFICIAL INTELIGENT)
5.செந்தில் குமார்(ALGORITHM)
7.ராம சந்திரன்(MATHS)
8.க்ரிஸ்டீ ராஜ்(MATHS II)
9.வெங்கடேஷ்(MATHS III)
10.கார்த்தி கேயன்(DESCRETE)
11.புனிதவதி(MATHS)
12.சுபாஸ் சந்திரபோஸ்(MATHS)
13.விஜய லட்சுமி,kannadi(DBMS,C,C++)
14.விஜய லட்சுமி(TOC)
15.பர்ணா பாஸ்(CORPENDARY LAB)
16.பழநிச்சாமி,Red(PHYSICS)
17.பவனி சங்கர்(DSP)
18.சரவண பெருமாள்(PROBABILITY)
19.விஜய் பாஸ்கர்(PHYSICS II)
20.பரமசிவம்(PHYSICS)

21.சசிபிரியா(ELECTRONICS)
22.சுதாகர்(CHEMISTRY)
23.மதி(ELECTRICAL)
24.ரேனுகா(COMPUTER GRAPHICS)
25.வெங்கடேஷ்(ENGINEERING DRAYING)
26.பாலகிருஷ்னன்(MICRO PROCESSOR)

Friday, March 21, 2008

என் உடன் பயின்ற கல்லூரி நண்பர்கள்..!

BE(AAME COLLEGE)

1.அழகுமணி
2.அமுதன்
3.அருண்.D
4.அருண்-tnj
5.அசோக்
6.அஸ்தோஷ திரிபாதி
7.அறிவழகி
8.பாலாஜி-tnj
9.பாலாஜி-man
10.பாலகுமாரன்
11.பாலசுப்ரமணியன்
12.பிரபு
13.ஆனந்தராஜ்

14.திணேஷ்-tnj
15.திவ்யா
16.ஆரோகிய அருமைராஜ்
17.இளையராஜா
18.கணேஷ்
19.கணேஷ்.MV
20.கவுரிஷங்கர்
21.கலைச்செல்வன்
22.கலைச்செல்வி
23.வெங்கடேஷ்
24.வினோத்

25.விக்கிரமன்
26.ரம்குமார்
27.விக்டர்
28.விஜய்நாகராஜ்
29.பவன்குமார்
30.ரோஸிகுமாரி
31.ராஜேஷ்
32.ராஜேஷ்வரன்
33.ராமராஜன்
34.சரவணன்
35.செந்தில்
36.சாய்லதா

37.விஜயலட்சுமி
38.பர்ஸானபர்வீண்
39.சுகன்யா
40.ரம்யா
41.கார்த்திகா
42.தர்மசவர்தினி
43.சசிகலா
44.தேவி
45.யாஸ்மின் பேகம்
46.ராஜகுமாரி
47.கிருஸ்ன பிரியதர்சினி
48.கவுரி
49.தீபா
50.ஏடிசன்
51.இளங்கோவன்
52.கவிதா
53.ஹரிஷங்கர்
54.முத்து குமார்
55.கணேஷ்
56.லக்ஷ்மி நாராயணன்
57.கோபிகண்ணா
58.ரஞ்சித்குமார்
59.கனிமொழி
60.வினோத்

M.E (Kings Engg College)

1. விஜய் பாபு
2.செந்தில் குமார ராஜா
3.பாலகிருஷ்ணன்
4.ராஜன்
5.அபினயா
6.காந்திமதி
7.ரேவதி
8.கார்த்திகேயன்
9.டைசன் ராஜ்
10.ப்ரீதி
11.காயத்ரி

காலத்தின் ஏதாவது ஒரு நாளில் இவர்களை சந்திக்க நேரலாம் இல்லை முடியாமலும் போகலாம்.....

Wednesday, March 5, 2008

கல்லூரியும் இரயில் பயணமும்

சிறு வயதில் இருந்தே எனக்குள் இருந்த மிக பெரிய ஆசைகலுள் ரயில் பயணமும் ஒன்று. என்றாவது ஒருநாலாவது ரயிலில் பயணம் செய்திட மட்டோமா என்று எண்ணிய காலங்களும் உண்டு.

என்னுடைய முதல் ரயில் பயணம் 20-ஆம் வயதில் நான் முதன் முதலில் கல்லூரிக்கு சென்ற நாள்தான். ஏனென்றால் அதுவரை எனக்கு ரயிலில் செல்வதற்கான சந்தர்ப்பங்களோ சூழ்நிலைகளோ ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றாக நினைவில் இருக்கின்றது அந்த நாள். நான் பொறியியல் படிப்பதற்கான கல்லூரியை தேர்வு செய்த நாள்(counsling).திருச்சி REC College Of Engineering-இல் நடைபெற்றது.

எல்லோரும் கல்லூரியை தேர்வு செய்யும் பொழுது கல்லூரியின் தரம், வசதி campus interview இதையெல்லாம் பார்த்து தான் தேர்வு செய்வார்கள் ஆனால் நான் தேர்வு செய்ததோ ரயிலில் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அந்த கல்லூரியை தேர்வு செய்தேன்.

கல்லூரியும் இரயில் பயணமும்-2
கல்லூரியை தேர்வு செய்தாகிவிட்டது. தஞ்சாவூர் போனவுடனே அந்த கல்லூரியை ஒருமுறை பார்த்துவிட்டு வருவது என்று முடிவெடுத்து தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்து டிக்கெட் எடுத்து கொண்டு ரயில் நிலையத்தின் உள்ளே சென்றேன்.

முதன் முறையா ரயில் பயணம் அதுவும் தனியாக.உள்ளே சென்றால் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் அந்த வண்டி நின்று கொண்டிருந்தது

நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது புதிதாக ஒரு யானையை பார்த்தவுடன் நம்முள் ஏற்படுமே ஒரு இனம் புரியாத சந்தோசம் அத்தனை அப்போது நான் உணர்ந்தேன்.அதுவரை படங்களிலும் பேருந்து பயணங்களின் பொழுது தூரத்தில் சென்று கொண்டிருக்கும் ரயில்களை மட்டுமே பார்த்து கொண்டிருந்த நான் அன்றுதான் முதன் முறையாக ரயில் வண்டியை மிக அருகாமையில் பார்க்கின்றேன்.

அந்த ரயில் வண்டி புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருப்பதாக அறிவித்தார்கள் அதற்குள் நான் நல்ல வசதியான ஆட்கள் மிக குறைவாக உள்ள ரயில் பெட்டியா பார்த்து அதன் படிக்கட்டுகளின் முன்னால் நின்று கொண்டேன்.வண்டி புறப்பட தயாரானது...!

கல்லூரியும் இரயில் பயணமும்-3

வண்டி மெதுவாக நகர்ந்தது.காது கிழியும் அளவிற்கு வண்டியின் என்ஜினிலிருந்து சத்தத்தொடும் அதிகமான புகையை கக்கிய படியும் மெதுவாக நகர்ந்தது டக் டக் என்ற சத்தத்துடன் வண்டி வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க அந்த நேரம் என்னுள் ஏற்பட்ட சந்தோசம் ஆனந்தம் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.

உடல் முழுவது ஒரு மெல்லிய உணர்வு கம்பி ஓடி மறைந்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது எனக்குள்.படியின் அருகில் நின்று கொண்டு ஒற்றை காலை வெளியில் நீட்டி நின்று கொண்டிருந்த பொழுது என் மீது பட்டு சென்ற அந்த தென்றலில் சுகத்தை இன்றளவும் உணர்கிறேன்.



எத்தனை நாள் காத்திருந்தேன் இந்த தருணதிற்காக அன்று நானும் ஒரு குழந்தையாகத்தான் மாறி போனேன் ரயில்வே கிராசிங்கில் காத்து கொண்டிருக்கும் இந்த சிறுவனை போல..

தஞ்சாவூருகும் கல்லூரிக்கும் இடையே மொத்தம் நான்கு நிறுத்தங்கள். மாரியம்மன்கோவில்,குடிகாடு,சாலியமங்கலம், அம்மாபேட்டை, அடுத்து கோவில் வெண்ணி


கல்லூரியும் இரயில் பயணமும்-4

ஒவ்வொரு நிறுத்தமாக வந்தது.மாரியம்மன்கோவில்,சாலியமங்கலம் அம்மா பேட்டை

கடைசியாக நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது ஆனால் வண்டி நிற்கவில்லை.ஏனென்றால் காலை மாலையில் வரும் வண்டிகள் மட்டுமே நின்று செல்லுமாம். அதனால் அடுத்த நிறுத்தமான நீடாமங்களத்தில் இறங்கினேன். இதுதான் என் முதல் ரயில் பயணம். பின்னர் ரயிலில் நடந்த நிகழ்வுகள் ஏராளம்.

கல்லூரியில் எனக்கு கிடைத்த முதல் நண்பன் premnath இவனும் நானும் பண்ண சேட்டைகள் கொஞ்சம் அல்ல.9 மணி கல்லூரிக்கு 7.30 மணி ரயிலை பிடிததாலே போதுமானது ஆனால் நாங்கள் 6.20 வண்டிக்கே தயாராகிவிடுவோம். ஏனென்றால் அந்த வண்டி bangalore-ல் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் வண்டி.இன்னும் பல காரணங்கள் சொன்னால் புரியாது.

மறக்க முடியாது அந்த ரயில் பயணங்களில் நான் பெற்ற முகவரி தெரியாத பல நண்பர்கள். ரயிலில் என்னை முதன் முதலில் ராகிங் செய்த அஞ்சனா அக்கா(தீப்பெட்டி குச்சியை வைத்து ரயில் பெட்டியின் நீளத்தை அளந்து சொல்ல சொன்னார்கள்.அதெல்லாம் பெரிய கதை)

இன்று நான் செல்லும் அநேக பயணங்களின் போதும் என்னை அறியாமலேயே தேடுகின்றன எனது விழிகள் நான் பார்த்து பழகிய நண்பர்கள் யாராவது இன்றும் என்னோடு பயணம் செய்கிறார்களா என்று..!

Friday, February 29, 2008

மதுரை

இடம்: மதுரை,ஏரியூர்,சிறாவயல்
நாள் : 14-01-2005

கதையை தொடங்குவதற்கு முன் மேலே உள்ள நால்வரை பற்றியும் ஒரு அறிமுகம். முதலில் உள்ளவர் பெயர் குமார். தற்பொழுது சென்னையில் பணி புரிந்து கொண்டிருக்கின்றார். இரண்டாவது சாமிநாதன் தற்பொழுது மதுரையில் வேலையில் உள்ளார். எனக்கு அடுத்து உள்ளவர் திரு நிதியானந்தம் கோயம்பதூரில் இருக்கின்றார். நாங்கள் நால்வரும் பள்ளி நாட்களில் இருந்தே நண்பர்கள் இன்றுவரை..

அப்பொழுது நாங்கள் இரண்டாம் வருட தேர்வுகளை முடித்து விட்டு விடுமுறையில் இருந்தோம். 7 நாங்கள் விடுமுறை இருந்தது.. அப்பொழுது பொங்கல் வேற வந்தது. சாமிநாதன் விடுமுறைக்கு தான் சொந்த ஊருக்கு செல்லலாம் என்றும் அங்க சிறாவயல் ஒரு ஊரில ஜல்லிக்கட்டு நடக்கும் என்றும் நீங்களும் வறீங்க என்று சொன்னான் சரி என்று நாங்களும் ஒப்பு கொண்டு ஒரு 4, 5 காளையையாவது அடக்கணும் சொல்லிட்டு பொங்கலுக்கு முதல் நாளே புறப்பட்டோம்.

தஞ்சாவூரில் ஏறி திருப்பதூர் வந்து இறங்கினோம் பின் அங்கிருந்து ஏரியூர் செல்வதற்கான பேருந்துகாக காத்திருந்தோம் ரொம்ப நேரமா வரவே இல்லை.இங்கே இருந்து ஏரியூர் எவ்வளவு தூரம் என்று சாமிகிட்டகேட்டோம் . அவனும் நடந்து போற தூரம்தான் சொன்னான் அவன் பேச்சை நம்பி நடக்க ஆரம்பிச்சோம் . 10 நிமிடம் நடந்திருப்போம் அதுவரை வராத பேருந்து எங்களை கடந்து சென்றது. அதனால என்னனு சொல்லிட்டு

நடந்தா 45 நிமிடம் நடத்திருப்போம் கால் வலி பெண்டு எடுத்துருச்சி ஒரு வழியா வந்து சேர்ந்தோம். நடந்து வந்த களைப்பில் நல்லா சாப்பிட்டுட்டு ஒரு தூக்கத்தை போட்டோம்.

மதுரை.....2

மறுநாள் காலை 6.30 மணிக்கு மேலதான் எழுந்திரிசோம்.எழுந்ததும் சூடா காபீ வந்தது சாப்பிட்டு விட்டு அங்க இருந்த கினத்துல ஒரு குளியல போட்டுட்டு காலை உணவை முடித்தோம்.பிறகு அங்க இருந்த மலை கோவிலுக்கு போகலாம்னு முடிவு பண்ணி புறப்பட்டோம். நடந்து போற தூரத்தில் தான் இருந்தது அந்த கோவில்.




மலை மீது கட்டியிருந்தார்கள் கொஞ்ச நேரம் சுத்திட்டு அரட்டை அடிச்சிட்டு வீட்டுக்கு வந்தோம்.

மதுரை.....3

மறுநாள் காலை ஜல்லிக்கட்டு நடக்கும் இடமான ஏரியூருக்கு அந்த ஊரிலிருந்தே நிறைய டெம்போ வண்டிகள் சென்றது. நல்ல வண்டியா பார்த்து ஆளுக்கு 10 ரூபாய் டிகெட் எடுத்துக்கிட்டு ஏறினோம் ஒரு அரை மணி நேர பயணத்திற்கு பிறகு சிறாவயலை சென்றடைந்தோம். சரியான கூட்டம் நம்ம கமல் ஹாசன் நடித்த விருமாண்டி படத்துல வரமாதிரி ஏகப்பட்ட ஹீரோக்கள் அவங்களுடைய வீரத்தை காட்டினார்கள். பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது..

அவனவன் உசுர காப்பாத்திக்க அடுத்தவன் வண்டினு கூட பார்காம ஏறி உட்கார்ந்து உசுர காப்பாத்திகிட்டு இருக்குறப்பவும் நம்ம குமார் பண்ண அலும்புக்கு அளவே இல்ல.

நான் எதிரில் வர மாட்ட மட்டும் தான் ஃபோடோ எடுப்பேன்டு சொல்லி எப்படியோ மேலே உள்ள ஒரே ஒரு ஃபோடோ மட்டும் எடுத்தான்..ஒருவழியா வீட்டுக்கு வந்துசேர மணி 8 ஆகிவிட்டது.அன்று இரவே தஞ்சாவூர் கிளம்பினோம். திருப்பதூர்ல இருந்து தஞ்சாவூருக்கு 3.30 மணி நேரம் இருக்கும் அந்த கவர்ன்மெண்ட் வண்டி ட்ரைவர் வண்டிய ஓட்டின ஸ்டைல பார்த்துட்டு அவருடைய ரசிகன் ஆகிவிட்டேன் நான். அந்த டப்பா வண்டியயும் எவ்ளோ அழகா ஓட்டினார் தெரியுமா..!

என் பயணம்..!

பயணங்கள் இனிமையானவை ஒவ்வொரு பயணமும் நமக்கு ஏதோ ஒரு அனுபவத்தைதருகின்றது.

ஒவ்வொரு பயணத்திலும் நாம் எதையோ தேடி போகின்றோம்.என்னுடைய முதல் பயணம் 1995-ஆம் ஆண்டு நான் 5-ஆம் வகுப்பு படித்தபோது தொடங்கியது.

நான் முதன் முதலில் சென்ற இடங்கள் பழநி மற்றும் கொடைக்கானல்.விவரம் தெரியாத வயதில் சென்றதால் அப்போது நடந்தவைகள் சரியாக நினைவில் இல்லை.இருந்தாலும் கோடைக்காணலில் குணா படம் எடுத்த குகையை பார்த்தது.செலவுக்காக வீட்டில் வாங்கி சென்ற 50 ரூபாயில்.அங்கிருந்த குரங்குகளுக்கு வாழைபழம் வாங்கி போட்டது வீட்டில் இருந்து கட்டி சென்ற புளிசாதத்தை பகிர்ந்து உண்டது.என்று சில நிகழ்ச்சிகள் மட்டும் நினைவில் இப்போதும் இருக்கின்றது.

மொத்தத்தில் எனது முதல் பயணம் புளியோதரை வாசத்தில் தொடங்கிபுழுதி வாசத்துடன் முடிந்தது..!

வேலை நிமித்தமாகவும் மற்றும் சுற்றுலாவுக்காகவும் நான் இதுவரை சென்ற இடங்கள்....

சென்னை
கோயம்புதூர்
கொடைக்கானல்
ஊட்டி
மைசூர் Palace
கர்நாடகா
தென்காசி
வால் பாறை
அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி(kerala)
வீகாலேண்ட் (Kerala)
டெல்லி
நாகர் கோவில்
வேளாங்கண்ணி
மூணாரு
பழநி
பிளாக் தண்டர்
Lalbagh Botanical Garden in Bangalore 

MGM Dizzee World (Chennai)

பாபநாசம் அருவி

Tuesday, February 26, 2008

நட்பின் வழியது..!

இடமாற்றம், வேலைப் பளு, புதிய நண்பர்கள்,காதலி, குடும்பம், தயக்கம், தலைக்கனம், ஞாபக மறதி, நேரமின்மை,சோம்பேறித்தனம், வாக்குவாதங்கள்
வாக்கு மீறல்கள்,மாறிய தொலைபேசி எண், அதைக் கொடுக்காமல் விட்ட எத்தனம், நான் அனுப்பி பதில் இல்லாத, நீ அனுப்பி நான் படிக்கத் தவறிய மின்னஞ்சல்கள், தேவையற்றதாகத் தோன்றி, பேசாமல் விட்ட வார்த்தைகள்
உன்னை நானும், என்னை நீயும் புரிந்துகொண்டமை, சரியாகவோ தவறாகவோ, முதிர்ச்சி, வயதிலும் மனதிலும், நடந்ததும் பொய்யாகிபோனதுமான  எதிர்பார்ப்புகள், அடைக்க மறந்த கடன்,அதைக் கேட்டுத் தொலைத்த நீ ,இன்னபிற இன்னல்களுக்கிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது
நம் நட்பு!

Saturday, February 9, 2008

இது வரை சொல்லாத காதல்...

இதை பற்றி நான் எழுத கூடாதுதான் இருந்தாலும் என் மன நிம்மதிக்காக சென்சார் செய்து சில வரிகள் எழுதி இருக்கிறேன். டைரி எழுதும் பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது.ஆனாலும் அத்தனை அழுத்தம் திருத்தமாக நடந்தது என்ன என்று எழுத முடியாவிட்டாலும் இன்னும் பசுமையாகவே நினைவில் இருக்கின்ற நான் காதலித்த காலங்கள்.

பெரும்பான்மையான என்னுடைய அத்தனை நினைவுகள் எல்லாவற்றயும் எழுத வேண்டும் என்றோ முடியுமென்றோ நினைக்கா விட்டாலும். இன்றிருக்கும் நினைவுகள் இன்னும் இருபது வருடங்களில் இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதால் சில வரிகள் எழுதி வைப்பது பிற்காலத்தில் பழைய பொழுதுகளின் போது சூடான தேநீர் அருந்தும் இனிமையை தரும் என்பதால் இரண்டு வரி எழுதி வைக்க விரும்பினேன்.

"ஏனென்றால் இது முற்று புள்ளி வைக்கப்பட்ட
என் முதல் காதல்...
இது வரை சொல்லாத காதல்...
இன்று வரை எட்டாத காதல் ."



அவளை பார்த்த முதல் தடவையே எனக்கு காதல் வரவில்லை.அப்பொழுது அவள் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தால்.காதலிக்கவோ இல்லை அதை பற்றி நினைத்து பார்க்கவோ கூடாத வயது அது.ஆனால் வாழ்க்கையில் காதல் இப்படித்தான் வருகின்றது.

சரி இப்பொழுது என் காதலுக்கு வருகின்றேன். அதற்கு முன் என்னை பற்றி நான் அவ்வளவு அழகானவன் இல்லை. அவளுடைய குடும்பமும் சற்று நடு தரமானது தான் என்று நினைக்கின்றேன். அப்பொழுது அவள் அந்த தெருவின் அருகிலேயே உள்ள ஒரு பள்ளியில்தான் படித்து கொண்டிருந்தாள் அவளுக்கு அப்பா கிடையாது. அவளுடைய அம்மா ஒரு அண்ணன். அவனுக்கு என்னை விடவும் ஓரிரண்டு வயது அதிகம் இருக்கும். அவளுடைய அம்மாவுக்கும்,அவனுக்கும் முன்பு என்னை பிடிக்கும் என்று நினைக்கின்றேன் பேசிய பொழுதெல்லாம் நன்றாக பேசியதாய் ஞாபகம்..

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை. கேள்விப்பட்ட வரையில் அறிவும் இல்லை(சும்மா விளையாட்டுக்கு தான்)இருந்திருந்தால் நான் பேச நினைத்தவைகளை ஒரு நிமிடமாவது செவி கொடுத்து கேட்டிருப்பாள். அவளை விடவும் நான் எந்த வகையிலும் அவளுக்கு குறைந்தவன் இல்லை. ஏனோ தெரியவில்லை நாளாக நாளாக என்னை அறியாமலேயே அவளை காதலிக்க தொடங்கி விட்டேன். அந்த கால கட்டத்தில் நாம் யாரையாவது காதலித்து தொலைய வேண்டி இருக்கின்றது அந்த நிலமை எனக்கும் ஏற்பட்டது..

அது மட்டும் அல்லாமல் அவள் ரோட்டிலோ இல்லை சாதாரணமாக வேறு இடங்களில் அதிகம் பேசி பார்த்ததில்லை அதுவும் ஒரு காரணம் அவ்வளவுதான் நான் காதலில் விழுந்த கதை.பின் நடந்தவைகள் ஏராளம்...!


 அவளை நான் நிறைய தடவை பார்த்தது எல்லாமே அவள் பள்ளியில் இருந்து திரும்பி வரும் பொழுது தான் அழகா குதிரை மாதிரி(குண்டு)நடந்து வருவாள்,அப்பொழுதெல்லாம் எப்பவும் தனியாக வரமாட்டாள் யாராவது ஒரு பெண் அவள் கூடவே வருவார்கள். ஆரம்ப காலங்களில் அவள் முகத்தை கூட நான் நேராக பார்க்க மாட்டேன் அவ்வளவு பயம். ஜன்னல்களின் பின்னால் ஒளிந்து நின்று பார்ப்பேன்.பேருந்து நிலையத்தில் அவளுக்கு தெரியாமலேயே ஒளிந்து நின்று பார்த்தது.

அவளுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நான் வாங்கும் வாழ்த்து அட்டைகளை அவளிடம் தராமலேயே கிழித்து போட்டது. ஒரு சின்ன பூமி உருண்டையை அவள் வாங்கி கொடுத்ததாக என்னிடம் போய் சொல்லி ஏமாற்றியது . அது தெரியாமல் அதனை பத்திரமாக பாதுகாத்தது பின் அவள் தரவில்லை என்று தெரிந்து நடு ரோட்டில் போட்டு உடைத்தது. இவ்வளவு நடந்தது என்றாலும் நாங்கள் பேசியநிமிடங்களை தவறு நொடிகளை எண்ணி விடலாம். அவள் என்னை காதலித்தது எனக்கு தெரியும் நான் அவளை காதலித்தது அவளுக்கும் தெரியும்..

நாங்கள் பேசி பேசி மாயவில்லை, பூங்கா கடற்கரை என்று சுற்றவில்லை மனம் விட்டு பேசி உலக விசயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. இந்த நிலையிலேயே ஒருவருக்கொருவர் புரிதல் வந்த உணர்வு இருந்தது....

எங்களுக்குள் எந்த சூழலில்-எந்த காலகட்டத்தில் காதல் வந்தது, ஆக்கிரமித்தது என்று சொல்ல முடியவில்லை. ஓசை படாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. இரண்டு பேருக்குள்லும் காதல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் உறுதியானது. எனக்கு இருந்த அதே உணர்வு அவளுக்கும் இருந்தது எனக்கு தெரியும். என்ன பயன் கடைசி வரை என் காதலை அவள் ஏற்று கொள்ளவும் இல்லை.! மறுக்கவும் இல்லை..!


நினைவுகள் தான் எத்தனை
விசித்திரமானவை..


என்றோ நாம் சிரித்ததை
இன்று நினைத்து பார்த்தால்
அழுகை வரும்.
என்றோ நாம் அழுததை
இன்று நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வரும்..