Monday, September 27, 2010

உன்னுடன் மட்டும்..

உன் ஆயுள் ரேகைக்குள்

என்னை ஒளித்துக்கொள்கிறேன்..

என் ஆயுள் முழுக்க உன்னுடன்

வாழ்ந்து விடும் ஆசையோடு! ! !

எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்!

எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்!

என்றிருந்து உனை மட்டுமே சிந்திக்கத் தொடங்கினேன்!

விடை காண முடியாத கேள்விகள் இவை..

என் கடைசி மூச்சை கூட - உன்

காற்றோடு கலந்து வைப்பேன்

உன் புன்னகைக்கு விருந்தாக!!

நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..

உலகத்தின் ஈர்ப்பில் சுழலாத இதயம் கூட..
உன் அன்பின் ஈர்ப்பில் மயங்குகிறது..

காதல் என்னும் வர்ணம் பூசினேன்,
நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..
நட்பு என்னும் வர்ணம் சேர்ந்ததும்
உலகமே அழகாய் மாறிவிட்டது..

'யாரோ' என்று அறிமுகம் ஆனாய்..
ஏதோ ஏதேதோ பேசிச் சென்றாய்..
நம் உறவுக்கு பெயரிட்டாய் 'ஆத்மார்த்தமான அன்பு' என்று..
பின்வாழ்க்கை இதுவென்று புரிய வைத்தாய்..
இன்று
"என் வாழ்க்கையே நீ தான்" என்று என்னைச்
சொல்ல வைத்தாய்..

பிடிக்கும் உன்னை..

பல மணி நேர பேச்சிற்கிடையே
உன் சில நொடி மௌனம்..
உன் சில நொடி அழுகை..
உன் சில நொடி சிரிப்பு..

சுற்றி ஏதேதோ நடக்க
என் உலகத்தில் நீயும் நானும் மட்டும்..

யாரும் இல்லாத சாலையைப் பார்த்தால் போதும்...
நாம் கைசேர்த்து நடக்கும் காட்சியை
மறுகணமே திரையிட தயங்காது என் இதயம்..

ம்ம்ம்ம்..
வாழ்க்கையின் நெடுந்தூர பயணத்தில்,
உன்னோடு நடந்து வந்த பாதையில் மட்டும்,
பசுமைக்கு பஞ்சம் இல்லை...

என்னவளே எங்கிருகிறாய்...

என்னவளே எங்கிருகிறாய்...
கடல் தாண்டும் தூரத்திலா
இல்லை கைக்கெட்டும் தூரத்திலா..

கேட்கும் பெயர்களையெல்லாம்
என் பெயரோடு இணைத்து
சொல்லி பார்க்கிறேன்..
அது உன் பெயராய் இருக்குமோ என்று
எண்ணியபடி..

முட்களை ரகசியமாய் கேட்கிறேன்
உன் பார்வையின் கூர்மை கூட
இப்படித் தான் இருக்குமோ என்று..

உன் தோல் சாய்ந்தால் எப்படி இருக்கும்
என்று எண்ணிக்கொண்டே - தலை சாய்கிறேன்
வீட்டுச சுவரில்..

தனிமையை தூக்கிலிடுவேன்
நாம் அறிமுகமாகிக் கொள்ளும் போது..

உனக்காக எழுதிய கடிதங்கள்
முகவரி இல்லாமல் தவிக்கிறது..

என்று உன் நிஜம் காண்பேன்..
என்று உன் கரம் சேர்ப்பேன்..
காத்திருக்கிறேன்..
என்னவளே எங்கிருகிறாய்...

Friday, February 26, 2010

அவளின் கவிதை வரிகள்..!


உன்னை நான் நேரில்
உன்னிப்பாக முகம்
பார்த்த தில்லை...
இப்போது பார்க்கிறேன்
அது உன் நிழல் என்றாலும்
நிஜமாய் உணர்கிறேன்...
நான் உன் நிழலாய்
இருக்க விரும்பினாலும்
உன் நிழல் படம்தான்
என்னுடன் வாழ்கிறது
இப்போது நான்
உன் அருகில்....


அழகாய் சிரித்தது
கண்ணால் பேசியது
அருகில் உன் முகத்தை
ஆனந்தமாய் பார்த்தது
சந்தோசம்..
சுகமான சுமை நீ
உன்னை சுமக்கும்
ஒவ்வொரு நொடியும்
சுகமாய் உணருகிறேன்..
கருவறையில் இருக்கும்
குழந்தை எப்போது தாய்க்கு
பாரமாய் தோன்றும்...

Tuesday, February 9, 2010

அவள் பேசிய குழந்தை மொழி...


உன்னிடமே சண்டை போடுகிறேன்...

உன்னிடமே அழுகிறேன் ...

உன் மடியிலேயே படுத்து உறங்குகிறேன்...

உனக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...


உன்னை சிரிக்கவும் வைக்கிறேன்...

உன்னை அழவும் வைக்கிறேன்...

உன்கிட்டயே சண்டை போடுகிறேன்...

நான் நல்லவளா கெட்டவளா..!
நான் யாருடா..?

நீ

தேவதை.

என் கனவில்

வந்தவள் அல்ல.

என்னை

கவனித்து கொள்ள

வந்தவள்...