Wednesday, March 5, 2008

கல்லூரியும் இரயில் பயணமும்

சிறு வயதில் இருந்தே எனக்குள் இருந்த மிக பெரிய ஆசைகலுள் ரயில் பயணமும் ஒன்று. என்றாவது ஒருநாலாவது ரயிலில் பயணம் செய்திட மட்டோமா என்று எண்ணிய காலங்களும் உண்டு.

என்னுடைய முதல் ரயில் பயணம் 20-ஆம் வயதில் நான் முதன் முதலில் கல்லூரிக்கு சென்ற நாள்தான். ஏனென்றால் அதுவரை எனக்கு ரயிலில் செல்வதற்கான சந்தர்ப்பங்களோ சூழ்நிலைகளோ ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றாக நினைவில் இருக்கின்றது அந்த நாள். நான் பொறியியல் படிப்பதற்கான கல்லூரியை தேர்வு செய்த நாள்(counsling).திருச்சி REC College Of Engineering-இல் நடைபெற்றது.

எல்லோரும் கல்லூரியை தேர்வு செய்யும் பொழுது கல்லூரியின் தரம், வசதி campus interview இதையெல்லாம் பார்த்து தான் தேர்வு செய்வார்கள் ஆனால் நான் தேர்வு செய்ததோ ரயிலில் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அந்த கல்லூரியை தேர்வு செய்தேன்.

கல்லூரியும் இரயில் பயணமும்-2
கல்லூரியை தேர்வு செய்தாகிவிட்டது. தஞ்சாவூர் போனவுடனே அந்த கல்லூரியை ஒருமுறை பார்த்துவிட்டு வருவது என்று முடிவெடுத்து தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்து டிக்கெட் எடுத்து கொண்டு ரயில் நிலையத்தின் உள்ளே சென்றேன்.

முதன் முறையா ரயில் பயணம் அதுவும் தனியாக.உள்ளே சென்றால் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் அந்த வண்டி நின்று கொண்டிருந்தது

நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது புதிதாக ஒரு யானையை பார்த்தவுடன் நம்முள் ஏற்படுமே ஒரு இனம் புரியாத சந்தோசம் அத்தனை அப்போது நான் உணர்ந்தேன்.அதுவரை படங்களிலும் பேருந்து பயணங்களின் பொழுது தூரத்தில் சென்று கொண்டிருக்கும் ரயில்களை மட்டுமே பார்த்து கொண்டிருந்த நான் அன்றுதான் முதன் முறையாக ரயில் வண்டியை மிக அருகாமையில் பார்க்கின்றேன்.

அந்த ரயில் வண்டி புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருப்பதாக அறிவித்தார்கள் அதற்குள் நான் நல்ல வசதியான ஆட்கள் மிக குறைவாக உள்ள ரயில் பெட்டியா பார்த்து அதன் படிக்கட்டுகளின் முன்னால் நின்று கொண்டேன்.வண்டி புறப்பட தயாரானது...!

கல்லூரியும் இரயில் பயணமும்-3

வண்டி மெதுவாக நகர்ந்தது.காது கிழியும் அளவிற்கு வண்டியின் என்ஜினிலிருந்து சத்தத்தொடும் அதிகமான புகையை கக்கிய படியும் மெதுவாக நகர்ந்தது டக் டக் என்ற சத்தத்துடன் வண்டி வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க அந்த நேரம் என்னுள் ஏற்பட்ட சந்தோசம் ஆனந்தம் வார்த்தையால் விவரிக்க முடியாதவை.

உடல் முழுவது ஒரு மெல்லிய உணர்வு கம்பி ஓடி மறைந்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது எனக்குள்.படியின் அருகில் நின்று கொண்டு ஒற்றை காலை வெளியில் நீட்டி நின்று கொண்டிருந்த பொழுது என் மீது பட்டு சென்ற அந்த தென்றலில் சுகத்தை இன்றளவும் உணர்கிறேன்.



எத்தனை நாள் காத்திருந்தேன் இந்த தருணதிற்காக அன்று நானும் ஒரு குழந்தையாகத்தான் மாறி போனேன் ரயில்வே கிராசிங்கில் காத்து கொண்டிருக்கும் இந்த சிறுவனை போல..

தஞ்சாவூருகும் கல்லூரிக்கும் இடையே மொத்தம் நான்கு நிறுத்தங்கள். மாரியம்மன்கோவில்,குடிகாடு,சாலியமங்கலம், அம்மாபேட்டை, அடுத்து கோவில் வெண்ணி


கல்லூரியும் இரயில் பயணமும்-4

ஒவ்வொரு நிறுத்தமாக வந்தது.மாரியம்மன்கோவில்,சாலியமங்கலம் அம்மா பேட்டை

கடைசியாக நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது ஆனால் வண்டி நிற்கவில்லை.ஏனென்றால் காலை மாலையில் வரும் வண்டிகள் மட்டுமே நின்று செல்லுமாம். அதனால் அடுத்த நிறுத்தமான நீடாமங்களத்தில் இறங்கினேன். இதுதான் என் முதல் ரயில் பயணம். பின்னர் ரயிலில் நடந்த நிகழ்வுகள் ஏராளம்.

கல்லூரியில் எனக்கு கிடைத்த முதல் நண்பன் premnath இவனும் நானும் பண்ண சேட்டைகள் கொஞ்சம் அல்ல.9 மணி கல்லூரிக்கு 7.30 மணி ரயிலை பிடிததாலே போதுமானது ஆனால் நாங்கள் 6.20 வண்டிக்கே தயாராகிவிடுவோம். ஏனென்றால் அந்த வண்டி bangalore-ல் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் வண்டி.இன்னும் பல காரணங்கள் சொன்னால் புரியாது.

மறக்க முடியாது அந்த ரயில் பயணங்களில் நான் பெற்ற முகவரி தெரியாத பல நண்பர்கள். ரயிலில் என்னை முதன் முதலில் ராகிங் செய்த அஞ்சனா அக்கா(தீப்பெட்டி குச்சியை வைத்து ரயில் பெட்டியின் நீளத்தை அளந்து சொல்ல சொன்னார்கள்.அதெல்லாம் பெரிய கதை)

இன்று நான் செல்லும் அநேக பயணங்களின் போதும் என்னை அறியாமலேயே தேடுகின்றன எனது விழிகள் நான் பார்த்து பழகிய நண்பர்கள் யாராவது இன்றும் என்னோடு பயணம் செய்கிறார்களா என்று..!

No comments: