Wednesday, June 26, 2024

எதைத் தந்தாலும் கொஞ்சம் உப்புக்கரிப்பேன்...🌊


என்னசெய்வதென்று

தெரியாமல்

நீண்ட பொழுதாய்

சுமந்து கொண்டிருக்கிறேன்

இரண்டு உள்ளங்கைகளும்

கைப்பொத்திக் கனக்கிறது

ஒன்று கண்ணீர் 

மற்றொன்று மௌனம்

இரண்டிலொன்றை

பரிசாகக் கேட்கிறாய்

No comments: