Monday, July 13, 2009

சென்னையும் நானும்..!

உள்ளங்காலில் முள்குத்தி உள்நின்று போனால் அதை எடுக்கும் வரையிலும் ஒரு வலி இருந்து கொண்டே இருக்குமே அதை போல நான் சென்னையில் இருந்த நாட்களை நினைக்கும் போதெல்லாம் அந்த வலி எனக்குள் ஏற்படும்..

சென்னை போன மறுநாளே
பிளாட்பார்ம் கிராசிங் பன்னதனால்
அபராதம் கட்டியதும். எங்களுக்கான
சமயலை நாங்களே சமைத்து உண்டதுமான
பல்வேறு நிகழ்வுகலுக்கிடையில்
சென்னை எனக்கான சரியான
வேலையை தரவிட்டாலும் கூட
வாழ்க்கை சார்ந்த பல நல்ல
விசயங்களை கற்று கொடுத்தது..

வாரத்தின் அனைத்து நாட்களிலும்
ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு விட்டு
ஞாயிற்று கிழமை களில் மட்டும் வீட்டு
சாப்பாட்டிற்காக நல்ல மெஸ்ஸை தேடி
அலைந்த போதுதான் வீட்டில் 5 நிமிடம்
லேட் ஆனாலும் கூட வாய்க்கு ருசியாக
சமைத்து போடும் அம்மாவின் சமயலை
குறை சொன்னதன் தவறை..


இரவு நேரத்து மழையில்
தனிமையில் எரியும் என்
தெரு விளக்கை போல நான்
தனியாக இருந்த நாட்களில்
எல்லாம் தனிமையின்
கொடுமையை
புரிய வைத்தது..

இன்னும் பல

கல்வி மட்டுமே ஒருவருக்குரிய வேலையை பெற்று தருவதில்லை என்றும் அதனை சார்ந்த மற்ற விசயங்களும் தான் என்பதையும்..

எனக்கு பிடித்த வேலையைத்தான் பார்ப்பேன் என்று சொல்லாமல் கிடைக்கின்ற வேலைல சேர்ந்து கொண்டு தன்னுடைய கனவு வேலையை அடைவதற்கு ஒரு பாதையாக அந்த வேலையை அமைத்து கொள்ளனும்.அப்படி இல்லை என்றால் சென்னைல காலம் தள்ளுறது கடினம்தான் என்பதையும்..

தொடரும்....

No comments: