Monday, May 4, 2009

மறக்க முடியாத அந்த நாட்கள்..!

இந்த நாட்கள் எல்லாம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானதும் என்னால் மறக்க முடியாததுமான தருணங்களை தாங்கி வந்து என்னுள் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி என்னை கலவரப்படுத்தியதுமான நாட்கள்.


1) 27-12-1984 இந்த உலகத்தோடு
    என்னையும் இணைத்து கொண்டநாள்

     (என்னுடைய பிறந்த நாள்).





2) 21-06-2006 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
(Reg No:370899)அறிவிக்கபட்ட நாள்.

3) 17-05-2002 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
(Reg No:781656)அறிவிக்கபட்ட நாள்.




4) 27-07-2002 நான் பொறியியல் படிப்பதற்கான கல்லூரியை (AAMEC) திருச்சி REC Engg கல்லூரியில் தேர்வு செய்த நாள்.




5) 15-04-2003 சினிமா படங்களிலும், பெரிய அலுவலகங்களிலும் கல்லூரிகளிலும் மட்டுமே பார்த்து வந்த கணிப்பொறி என் வீட்டிற்கு வந்த நாள்.




6) 02-12-2006 நான் வாங்கிய முதல் சம்பளத்தில் என் அம்மாவிற்கு புடவை வாங்கி (சரவணா ஸ்டோர்-chennai) அனுப்பிய நாள்.




7) 28-07-2011 (MASS POLYTECHNIC college)கல்வி சுற்றுலா சென்ற நாள்.....


Thursday, April 16, 2009

தெரியவில்லை அன்று..!

1.நம் வாழ்க்கையில் பெரிய சோகம் விரும்பியவர்களை பிரிவதுதான் உண்மைதான் கல்லூரிப் பருவத்தில் பட்டாம்பூச்சியாய் பறந்த நாட்களில் உணரவில்லை பிரிவின் வலியை அன்று..

2.நம் வாழ்க்கையில் பல சந்திப்புகழும் பிரிவுகளும் தவிர்க்க முடியாதது என்று.

3.உலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு எனக்கு புரிய வைத்த இடம்..(இதுதான் எனக்கு சோறுபோட போகும் தெய்வம் என்றும்)

Wednesday, April 15, 2009

நினைவில் இல்லை


1.நான் முதன் முதலாய் பேசிய பேச்சு..?

2.முதன் முதலாய் எழுதிய எழுத்து..?

3.எனக்கு "அ" சொல்லிக்கொடுத்த முதல் ஆசிரியர்..?

4.உன் மதிப்பெண் குறைவிற்கு உன் வருகை குறைவு, உன் கவனக்குறைவு,நீ படிக்கும் நேரம் குறைவு,அத்துடன் நானும் ஒரு காரணம் என்று என்னை அன்பாக தொட்டு என் இதயத்திற்கு பேசிய ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை..?

5. 8-ம் வகுப்பு படித்த சமயம் எனக்கு வகுப்பெடுத்த Training டீச்சருக்கு பரிசாக நான் வாங்கி கொடுத்த வாழ்த்து அட்டை அதில் நான் கிறுக்கி கொடுத்த முதல் கவிதை ....?
டீச்சரின் பெயர் நினைவில் இல்லை...?

6. மதிய உணவு
இடைவேளையின்போது
அரண்மனை வாசலில் நாங்கள்
வரிசையாக அமர்ந்து
சப்பாட்டோடு
பாசத்தையும்
நேசத்தையும்
கேளிபேச்சுகளுடன்
வெட்டி அரட்டைகளோடும்
பகிர்ந்து உண்ட நாட்கள்
அவர்களின் முகவரிகள்
அவர்களின் பெயர்கள்..?
எதுவுமே நினைவில்லை..?

Friday, March 20, 2009

எனக்கு பிடிக்கும்..


1.அதிகாலை எழுவது பிடிக்கும்..






2.இரவு நேரத்தில் தனித்து இருக்கும் நிலவுக்கு துணையாக அமர்ந்து எதயாவது கிறுக்கி கொண்டிருக்க பிடிக்கும்..




3.நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் பொறியியல் படிப்போடு வாழ்க்கை பாடத்தையும் கற்று கொடுத்து பல நல்ல உள்ளங்களை எனக்கு அறிமுகம் செய்து கொடுத்த என் கல்லூரியை AAMEC எனக்கு பிடிக்கும்..



4.சென்னையில் நான் தனிமையை உணரும் பொழுதுகளில் எல்லாம் ஆர்ப்பரித்து வந்து எனக்கு ஆறுதல் சொல்லிய(Marina Beach) அலைகளை எனக்கு பிடிக்கும்..



5.பார்க்கும் பொழுது எல்லாம் பரவசப்படுத்தி இருமாப்போடு எழுந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவில் கோபுரமும் பிடிக்கும்..




6.நானே மறந்து போன பல விசயங்களை எனக்கு அவ்வப்போது நினைவு படுத்தும் எனது டைரியை பிடிக்கும்..





7.அம்மாவின் சமையல் எல்லாமே பிடிக்கும்..

நினைவில் இருக்கு

1.பள்ளி நாட்களில் கட் அடித்து விட்டு நானும் என் நண்பனும் (மாரிமுத்து)st'peters school ground ku சென்று கொடுக்காப்புலி,நெல்லிக்கா அடித்து தின்ற நாட்கள்..

2.8 ம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடியது, வீரபாண்டிய காட்டபொம்மன் வேடம் அணிந்து நடித்தது.

3.12- ம் வகுப்பு பாஸ் செய்த உடன் தேர்வு என்னை மீண்டும் மீண்டும் பார்த்து விட்டு அதை கையில் சுருட்டி வைத்து கொண்டு "IAS" pass பண்ண ரெஞ்சுக்கு நாலு வீதியும் வலம் வந்த நாட்கள்..

4.கல்லூரி காலத்தில் நாங்கள் சென்ற பல தென் இந்திய மற்றும் வட இந்திய சுற்றுலா சென்ற நாட்கள்..

Monday, December 8, 2008

கல்லூரி வாழ்க்கை...!

பிறந்த குழந்தையை அரவணைக்கும் தாயைப்போல
நம்மை அரவணைத்த நம் கல்லூரி...

முதலாண்டில் கழுகாய் நம்மை கொத்திச்
செல்ல முயன்ற சீனியர் மாணவர்கள்...

நம்மை Albert Einstein-களாக மாற்ற
முயன்ற புரொபஸர்கள்...

கூட்டம் கூட்டமாக ஒரே அறையில் நாம்
கண்டுகளித்த வண்ணமயமான திரைப்படங்கள்...

பொறுப்பற்று சுற்றிய நம்மை ஆறு மாதத்திற்கு
ஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam...

உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல்
விடிய விடிய நாம் ‘வறுத்த’ கடலைகள்...

எப்போதுமே கடைசி நாளில் நாம்
சமர்ப்பிக்கும் Recordகள், Assignment-கள்...

நிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அசைக்க முடியாத
நம்மை அதிர வைத்த Anna University Result-கள்
நாமிட்ட தேவையற்ற சச்சரவுகளும் அதில்
இருந்து கற்ற கசப்பான பாடங்கள்...

விடுதியின் குறுகிய நடைபாதையில் நாம்
விளையாடிய Cricket மற்றும் Football...

தினந்தோறும் வகுப்பிற்கு லேட்டாக சென்று
நாம் ‘maintain’ செய்த Punctuality...

வைத்திருக்கும் எல்லா Equipment-யும்
பொசுக்கி நாம் செய்த Lab வகுப்புகள்...

Arrear உறுதியானாலும் தன்னம்பிக்கையோடு
நாம் நிரப்பும் 44 பக்க விடைத்தாள் என்று எல்லாமே
இப்போது திரும்பி பார்த்தால் “குறும்பு” செய்தது
போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் இவையெல்லாம்
தான் எனக்கு “வாழ்க்கையை” சொல்லி கொடுத்தது....

Saturday, September 20, 2008

நான் படித்த கல்வி சாலைகள்...


ME(Pervasive Computing Technologies) (2010-2012)
Kings College of Engineering,
Pudukottai (Dt).




BE(Computer Science & Engineering) (2002-2006)
Anjalai Ammal Mahalingam Engg College,
Kovilvenni, Thiruvarur(Dt).





HSC Examination (2001-2002)
Raja's Hr.Sec.School
Thanjavur(Dt).

SSLC Examination (1999-2000)
Raja's Hr.Sec.School
Thanjavur(Dt).




6Th To 8Th (1995-1998)
T.K.R.Middle School
Thanjavur(Dt).




1 Std To 5Th Std (1990-1995)
Venkateshwara Mt.School
Thanjavur(Dt).