Friday, March 20, 2009

எனக்கு பிடிக்கும்..


1.அதிகாலை எழுவது பிடிக்கும்..






2.இரவு நேரத்தில் தனித்து இருக்கும் நிலவுக்கு துணையாக அமர்ந்து எதயாவது கிறுக்கி கொண்டிருக்க பிடிக்கும்..




3.நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் பொறியியல் படிப்போடு வாழ்க்கை பாடத்தையும் கற்று கொடுத்து பல நல்ல உள்ளங்களை எனக்கு அறிமுகம் செய்து கொடுத்த என் கல்லூரியை AAMEC எனக்கு பிடிக்கும்..



4.சென்னையில் நான் தனிமையை உணரும் பொழுதுகளில் எல்லாம் ஆர்ப்பரித்து வந்து எனக்கு ஆறுதல் சொல்லிய(Marina Beach) அலைகளை எனக்கு பிடிக்கும்..



5.பார்க்கும் பொழுது எல்லாம் பரவசப்படுத்தி இருமாப்போடு எழுந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவில் கோபுரமும் பிடிக்கும்..




6.நானே மறந்து போன பல விசயங்களை எனக்கு அவ்வப்போது நினைவு படுத்தும் எனது டைரியை பிடிக்கும்..





7.அம்மாவின் சமையல் எல்லாமே பிடிக்கும்..

நினைவில் இருக்கு

1.பள்ளி நாட்களில் கட் அடித்து விட்டு நானும் என் நண்பனும் (மாரிமுத்து)st'peters school ground ku சென்று கொடுக்காப்புலி,நெல்லிக்கா அடித்து தின்ற நாட்கள்..

2.8 ம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடியது, வீரபாண்டிய காட்டபொம்மன் வேடம் அணிந்து நடித்தது.

3.12- ம் வகுப்பு பாஸ் செய்த உடன் தேர்வு என்னை மீண்டும் மீண்டும் பார்த்து விட்டு அதை கையில் சுருட்டி வைத்து கொண்டு "IAS" pass பண்ண ரெஞ்சுக்கு நாலு வீதியும் வலம் வந்த நாட்கள்..

4.கல்லூரி காலத்தில் நாங்கள் சென்ற பல தென் இந்திய மற்றும் வட இந்திய சுற்றுலா சென்ற நாட்கள்..