Thursday, April 16, 2009

தெரியவில்லை அன்று..!

1.நம் வாழ்க்கையில் பெரிய சோகம் விரும்பியவர்களை பிரிவதுதான் உண்மைதான் கல்லூரிப் பருவத்தில் பட்டாம்பூச்சியாய் பறந்த நாட்களில் உணரவில்லை பிரிவின் வலியை அன்று..

2.நம் வாழ்க்கையில் பல சந்திப்புகழும் பிரிவுகளும் தவிர்க்க முடியாதது என்று.

3.உலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு எனக்கு புரிய வைத்த இடம்..(இதுதான் எனக்கு சோறுபோட போகும் தெய்வம் என்றும்)

Wednesday, April 15, 2009

நினைவில் இல்லை


1.நான் முதன் முதலாய் பேசிய பேச்சு..?

2.முதன் முதலாய் எழுதிய எழுத்து..?

3.எனக்கு "அ" சொல்லிக்கொடுத்த முதல் ஆசிரியர்..?

4.உன் மதிப்பெண் குறைவிற்கு உன் வருகை குறைவு, உன் கவனக்குறைவு,நீ படிக்கும் நேரம் குறைவு,அத்துடன் நானும் ஒரு காரணம் என்று என்னை அன்பாக தொட்டு என் இதயத்திற்கு பேசிய ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை..?

5. 8-ம் வகுப்பு படித்த சமயம் எனக்கு வகுப்பெடுத்த Training டீச்சருக்கு பரிசாக நான் வாங்கி கொடுத்த வாழ்த்து அட்டை அதில் நான் கிறுக்கி கொடுத்த முதல் கவிதை ....?
டீச்சரின் பெயர் நினைவில் இல்லை...?

6. மதிய உணவு
இடைவேளையின்போது
அரண்மனை வாசலில் நாங்கள்
வரிசையாக அமர்ந்து
சப்பாட்டோடு
பாசத்தையும்
நேசத்தையும்
கேளிபேச்சுகளுடன்
வெட்டி அரட்டைகளோடும்
பகிர்ந்து உண்ட நாட்கள்
அவர்களின் முகவரிகள்
அவர்களின் பெயர்கள்..?
எதுவுமே நினைவில்லை..?