Monday, December 8, 2008

கல்லூரி வாழ்க்கை...!

பிறந்த குழந்தையை அரவணைக்கும் தாயைப்போல
நம்மை அரவணைத்த நம் கல்லூரி...

முதலாண்டில் கழுகாய் நம்மை கொத்திச்
செல்ல முயன்ற சீனியர் மாணவர்கள்...

நம்மை Albert Einstein-களாக மாற்ற
முயன்ற புரொபஸர்கள்...

கூட்டம் கூட்டமாக ஒரே அறையில் நாம்
கண்டுகளித்த வண்ணமயமான திரைப்படங்கள்...

பொறுப்பற்று சுற்றிய நம்மை ஆறு மாதத்திற்கு
ஒருமுறை நெறிப்படுத்திய Semester Exam...

உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் Cellphone-ல்
விடிய விடிய நாம் ‘வறுத்த’ கடலைகள்...

எப்போதுமே கடைசி நாளில் நாம்
சமர்ப்பிக்கும் Recordகள், Assignment-கள்...

நிலஅதிர்ச்சியாலும் சுனாமியாலும்கூட அசைக்க முடியாத
நம்மை அதிர வைத்த Anna University Result-கள்
நாமிட்ட தேவையற்ற சச்சரவுகளும் அதில்
இருந்து கற்ற கசப்பான பாடங்கள்...

விடுதியின் குறுகிய நடைபாதையில் நாம்
விளையாடிய Cricket மற்றும் Football...

தினந்தோறும் வகுப்பிற்கு லேட்டாக சென்று
நாம் ‘maintain’ செய்த Punctuality...

வைத்திருக்கும் எல்லா Equipment-யும்
பொசுக்கி நாம் செய்த Lab வகுப்புகள்...

Arrear உறுதியானாலும் தன்னம்பிக்கையோடு
நாம் நிரப்பும் 44 பக்க விடைத்தாள் என்று எல்லாமே
இப்போது திரும்பி பார்த்தால் “குறும்பு” செய்தது
போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் இவையெல்லாம்
தான் எனக்கு “வாழ்க்கையை” சொல்லி கொடுத்தது....