Sunday, January 20, 2008

நான் எதிர்பார்ப்பதில்லை..!

நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை.

நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை.

என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம்.நான் வெறுப்பதை பலர் விரும்பலாம்.

இவை மனித இயற்கை.என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே.நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது வருத்தப்படுவேன் ஆனால் அவர்களை வெறுப்பதில்லை.

எவர் எப்படி பட்டவராக இருந்தாலும் நாம் அவர்களிடம் நன்றாக நடந்து கொண்டால் அவர்களும் நம்மிடம் நன்றாக நடந்து கொள்வார்கள்.நம்மிடம் நன்றாக நடந்து கொள்கிறவர்கள் எல்லோருமே நல்லவர்கள் தான்..

பிரிவும் வலியும்..!

மனசுக்கு பிடித்த ஒருவரோடு வாழ்வது என்பது ஒரு அபூர்வமான கிப்ட் மாதிரி.

ஆசை மட்டும் இருந்தால் போதாது காலமும் யதார்த்தமும் வேறு வேறு திசைகளுக்கு நம்மை இழுத்து சென்று உறவுகளை வெறும் நினைவுகலாக மட்டுமே விட்டு சென்று விடுகின்றது.


சின்ன வயதில் குடும்பம் உறவுகள்,நண்பர்கள்,கல்லூரினு சின்ன வட்டத்திற்குள் மட்டுமே இருக்கோம்.அப்படியே காதல்,கணவுன்ணு ஒவ்வோன்னா வரிசயா வரும்.காதலிக்கின்ற வயதில் நாம தேடிக்கிற சந்தோசம், நம்முடைய நண்பர்கள், நம்ம உலகம்னு எல்லாமே அழகா இருக்கும். இப்படி ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே இருந்த நமக்கு அதற்கு வெளியே வாழ்க்கை எப்படி இருக்கின்றது அதை எப்படி எதிர் கொள்வது, நமக்காண தேவையை நாமே எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்று கிளை விடும் கேள்விகள் ஒன்று இரண்டு அல்ல.!


நாம் வாழ்கையில் பல சந்திப்புகளும் பிரிவுகளும் தவிர்க்க முடியாதது நாம் வாழ்கையில் பெரிய சோகம் விரும்பியவர்களை பிரிவதுதான்.அப்படி பிரிந்தவர்களை நாம் நினைத்து பார்த்தால்,அவர்களிடம் பேசுவதற்கு இன்னும் வார்த்தைகள் இருக்கின்றன.காலத்தின் ஏதாவது ஒரு நாளின் நாம் அவர்களை சந்திக்க நேரலாம் இல்லை முடியாமலும் போகலாம்..!

வாழ்க்கைதான் எத்தனை நிச்சயமற்றது..!

சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...!

சில விசயங்களை வாழ்க்கையில் தவிர்கவே முடியாது.

மரணம் மாதிரி, நட்பு,காதல்,பிரிவு எல்லாமே வாழ்வதற்கான காரணங்கள் தான். வாழ்கிற கொஞ்ச நாட்களில் கிடைக்கிற எல்லா வலிகலுமே தாங்கிக்கவும், தாண்டவும் வேண்டியவைததான். 



வாழ்க்கை முழுக்க நாம் பணம், காதல்,நிம்மதினு நம் பக்கத்தில் இருந்து கொண்டு கண்ணா முச்சி காட்டுகிற பல விசயங்களை தேடி கொண்டே இருக்கிறோம். தேடுதல் தானே வாழ்க்கை.

வாழ்க்கையை காதலிக்கணும் அப்போதான் துன்பம் ஓடி ஒழிகின்ற விசயமாக இல்லாமல் கடந்து வரவேண்டிய அனுபவமாக இருக்கும்

யாருக்காக எழுதுகிறேன்...

என்ன எழுதுகிறேன்
யாருக்காக எழுதுகிறேன்
எதுவும் தெரியவில்லை எனக்கு..
எறும்புகழான எழுத்துகள்
கூட்டம் கூட்டமா கலைவதை
 நிறுத்தவும் தெரியவில்லை..


நிலவில் மட்டும் உலகம்
விடிந்து இருக்கும் இரவில்
நானும் ஏதாவது
கிறிக்கி கொண்டிருப்பதையும்
நிறுத்த முடியவில்லை...